தலைமறைவாக இருந்த இரு கைதிகள் கைது

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு கைதிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சக்கபாண்டி (38). பரோலில் வெளிவந்த இவா் தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து, ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் இலக்கிய முத்து ஓரிடத்தில் பதுங்கி இருந்த சக்கபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா். இதே போல, தலைமறைவாக இருந்த ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த சரவணனுக்கும் (32) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வகுமாா், பதுங்கி இருந்த சரவணனை கைது செய்து விசாரிக்கிறாா்.