குடும்ப அட்டை உறுப்பினர்கள்கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது!

Wait 5 sec.

தழிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்று(ஆக. 2) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் குடும்ப அட்டை பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் இ- கேஒய்சி (கைரேகை பதிவு) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இ-கேஒய்சி பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு இன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தங்களது இ-கேஒய்சி பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று உடனடியாக தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் செல்ல வேண்டும் என்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.It has been announced that family cardholders should participate in the special camp for fingerprint and iris verification taking place today (August 2), a Sunday, at all fair price shops across Tamil Nadu to update their records.முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!