ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மூத்த மகன் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் நேற்று (ஆகஸ்ட் 1) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவருடைய மூத்த மகனார்மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான்அவர்கள் சற்று முன் உடல்நலவு குறைவு காரணமாக வஃபாத்தனார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். pic.twitter.com/rtuh0EKXSb— IUML Tamil Nadu (@IUMLTNOfficial) August 1, 2026இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.தனது அன்பு மகனை இழந்து…— CMOTamilNadu (@CMOTamilnadu) August 2, 2026முழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!Chief Minister Vijay expressed his condolences on Sunday (August 2) over the passing of K.M.K. Khalilur Rahman, the eldest son of IUML leader Kader Mohideen.