கனிமங்கள் ஏற்ற வந்த கேரள லாரிகள் திருப்பி அனுப்பிவைப்பு

Wait 5 sec.

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்த நிலையில், கேரளத்திலிருந்து வந்த லாரிகள் புதன்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. தேனி மாவட்டம், போடி பகுதியிலிருந்து தினசரி பல லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்-சாண்ட், மணல் ஆகியவற்றை வரும் 3 மாதங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, கேரளத்திலிருந்து போடிக்கு வந்து மணல், ஜல்லி, கற்கள் ஏற்றி தயாராக இருந்த லாரிகள் கேரளத்துக்கு கொண்டு முடியாமல் குவாரிகளிலேயே கொட்டப்பட்டன. மேலும், காலியான லாரிகள் மட்டும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, கேரளத்திலிருந்து வந்த லாரிகளும் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.