கால்பந்து - கிரிக்கெட்: ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த ஃபாத்திமா சனா, உஸ்மான் தாரிக்!

Wait 5 sec.

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாத்திமா சனா சந்தித்தார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் வந்து கிரிக்கெட் விளையாடினார். தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் இந்த சீசன் போட்டிகள் ஜூலை 21 முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நேற்றிரவு பர்மிங்காம் ஃபீனிக்ஸ் - வெல்ஷ் ஃபயர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெல்ஷ் ஃபயர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியைக் காண ஜூட் பெல்லிங்கம் வந்திருந்தார். அங்கு பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாத்திமா சனா சந்தித்தார். கிரிக்கெட்டும் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. View this post on Instagram கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி மூன்றாமிடம் பிடித்து அசத்தியது. ஜூட் பெல்லிங்கம் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தார். தற்போது, தனது தற்காலிக ஓய்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியில் ஆடவர் அணியில் உஸ்மான் தாரிக்கும் மகளிர் அணியில் ஃபாத்திமா சனாவும் விளையாடி வருகிறார்கள். இந்தத் தொடரில் ஆடவர் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. View this post on Instagram தங்கப் பதக்கம் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல... அருந்ததி சௌதரி நெகிழ்ச்சி!Jude Bellingham meets Pakistan cricketers Usman Tariq and Fatima Sana in The Hundred