செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் முதல் காலாண்டு நிகர லாபம் 57% அதிகரிப்பு!

Wait 5 sec.

கொல்கத்தா: செஞ்சுரி பிளைபோர்ட்ஸ், பல்வேறு வணிகப் பிரிவுகளில் மூலம் ஈட்டிய வருவாய் வளர்ச்சியின் காரணமாக, ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 57 சதவீதம் உயர்ந்து ரூ. 83.30 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 52.93 கோடியாக இருந்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் செயல்பாடுகள் மூலமான நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 1,169.36 கோடியிலிருந்து 33.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,561.38 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், மொத்த வருமானம் ரூ. 1,171.24 கோடியிலிருந்து ரூ. 1,563.55 கோடியாக அதிகரித்தது.மூலப்பொருட்கள், பணியாளர் ஊதியம் மற்றும் பிற செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, மொத்தச் செலவு ரூ. 1,100.09 கோடியிலிருந்து ரூ. 1,447.27 கோடியாக உயர்ந்துள்ளது.வணிகப் பிரிவுகளில், பிளைவுட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் மூலம் தொடர்ந்து மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ள நிலையில், இவற்றின் வருவாய் ஓராண்டுக்கு முன்பு இருந்த ரூ. 650.31 கோடியிலிருந்து ரூ. 861.23 கோடியாக அதிகரித்தது.லேமினேட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகளின் மூலம் வந்த வருவாயானது ரூ. 173.73 கோடியிலிருந்து ரூ. 199.36 கோடியாக அதிகரித்தது. லாஜிஸ்டிக்ஸ் சேவையிலும் அதன் வருவாய் ரூ. 37.76 கோடியிலிருந்து ரூ. 55.86 கோடியாக உயர்ந்துள்ளது.வரிக்கு முந்தைய லாபத்தைப் பொறுத்தவரை, பிளைவுட் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகள் பிரிவில், கடந்த ஆண்டு ரூ. 95.33 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 142.49 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.Century Plyboards (India) Ltd reported a 57 per cent rise in consolidated net profit to Rs 83.30 crore.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!