காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ விளையாட்டில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இதுவாகும். தங்கம் வென்ற அஸ்மிதா டே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. Asmita Dey made history at the Commonwealth Games 2026 on Friday as the 23-year-old from Tripura became the first Indian to win a gold medal in judo at the marquee event. 10,000 மீட்டரில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் குல்வீா் சிங்- பளுதூக்குதலில் தொடரும் வேட்டை