இந்தியா - சீனா எல்லை வர்த்தகத்திற்காக நாது லா கணவாய் இன்று திறப்பு!

Wait 5 sec.

இந்தியா - சீனா இடையே எல்லை வர்த்தகம் மேற்கொள்ள, 6 ஆண்டுகளுக்கு முன் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட நாது லா கணவாய் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாதுலா எல்லை வர்த்தகப் பாதை இந்தியா - சீனா இடையேயான நீண்டகால வர்த்தக உறவின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது எல்லை தாண்டிய வர்த்தகத்தை ஊக்குவித்து, உள்ளூர் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்தியா - சீனா இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக உறவை வலுப்படுத்தவும் இது உதவும் என்று கூறப்படுகிறது.நாது லா கணவாய் திறக்கப்பட்ட நிகழ்வில், சிக்கிம் மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷெரிங் டி. பூட்டியா கலந்துகொண்டார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் எனக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி மற்றும் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் முயற்சிகளால் எல்லை வர்த்தகம் மீண்டும் சாத்தியமானதாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சிக்கிமின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கும் இது ஆதரவாக இருக்கும் என்றும் பூட்டியா தெரிவித்தார். நாது லா கணவாய் பகுதியில் வர்த்தகம் செய்யக்கூடிய சுமார் 35 வகையான பொருட்கள் பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலை விரிவுபடுத்துமாறு, இந்திய அரசின் வர்த்தக இயக்குநரகத்திற்கு சிக்கிம் அரசு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதாக பூட்டியா குறிப்பிட்டார். மேலும், “பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம், சிக்கிமின் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார். நாது லா எல்லைப் பகுதி வர்த்தகத்தின் கீழ், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருள்கள், பாரம்பரிய மதச் சின்னங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பொருள்களை தற்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியும். இந்த ஆண்டில், எல்லை தாண்டிய வர்த்தகம் மேற்கொள்ள பதிவு செய்த 38 வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, நாதுலா வழியாக திங்கள் முதல் வியாழன் வரை எல்லை வர்த்தகம் நடைபெறும். இது நவம்பர் மாதம் வரை தொடரும். Nathu La Pass opens today for India-China border trade!புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி!