சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளரைக் கரம் பிடிக்கும் நடிகை மிருணாளினி!

Wait 5 sec.

சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை நடிகை மிருணாளினி ஆன்மிகப் பேச்சாளர் திருமணம் செய்யவிருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே குருகுலக் கல்வி, பாவ - புண்ணிய பலன்கள் போன்ற தலைப்புகளில் பேசி சர்ச்சைக்குள்ளானவர் ஆன்மிகப் பேச்சாளர் எனக் கூறப்படும் மகா விஷ்ணு. பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்த இவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார் என இரு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் பேசியதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவருடன் மகா விஷ்னு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகை மிருணாளினியுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. நடிகை மிருணாளினி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழில் சாம்பியன், எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு வெளியான ரோமியோ படத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த மிருணாளினி, தற்போது ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை தனது காதலராக அறிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “ஏனென்றால் உன்னை நேசிப்பதில், என்னை நானே நேசிப்பதைப் போன்று உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எப்போதும் உன்னை மட்டுமே நான் தேர்ந்தெடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)Actress Mrinalini to tie the knot with controversial spiritual speaker!மன்னிக்க முடியாது... பிரபுதேவாவை விமர்சித்த பிரபல நடிகை!