மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மின்னணு இயந்திரங்களில் 2-வது நாளாக மறுஆய்வு

Wait 5 sec.

சென்னை கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது நாளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். இருப்பினும், 74,202 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றார்.இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனு வைத்தார். இதன்படி, 001, 004, 017, 028, 032, 075, 078, 079, 084, 087, 112, 122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடி மையங்களின் மின்னணு இயந்திரங்கள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.இதனையடுத்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்யும் பணி புதன்கிழமையில் (ஜூலை 29) தொடங்கியது. ஒரு நாளுக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் 7 நாட்களுக்கு இந்தப் பணி நடைபெறுகிறது.இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தொடங்கிய சரிபார்ப்புப் பணி, மு.க. ஸ்டாலின் உள்பட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?Verification of EVMs in M.K. Stalin's Kolathur constituency