சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே அறிவித்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செலுத்திய ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள ரஹானே, 2020 - 21 பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், பல முக்கிய வீரர்கள் இல்லாதபோதும், ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.Ajinkya Rahane announces retirement from all format of cricket