இ20 பெட்ரோலால் வாகனங்களில் சில பாகங்கள் பாதிக்கப்படலாம்: மத்திய அமைச்சர்

Wait 5 sec.

வாகனங்களில் இ20 பெட்ரோலால் பெரிதாக பாதிப்பேதும் ஏற்படாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.உலகளாவிய கச்சா எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் எத்தனால் கலந்த (இ20) பெட்ரோல் பயன்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால், இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், வாகனங்களில் இ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, "வாகனங்களில் இ20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.ஆய்வுகளின்படி, இ20 பெட்ரோலுக்காக கார்கள், இருசக்கர வாகனங்களின் என்ஜின்களில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டிய அவசியமில்லை எனத் தெரிய வந்துள்ளது.பழைமையான வாகனங்களில்கூட இ20 பெட்ரோலில் இயங்கும்போது, அவற்றின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடோ வழக்கத்துக்கு மாறான தேய்மானங்களோ எதுவும் காட்டவில்லை என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.2005 முதல் 2016 வரையில் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 (BS-III) வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்களும் கேஸ்கட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். இருப்பினும், இதனை வாகனங்களின் வழக்கமான சர்வீஸிலேயே எளிதாகச் செய்துவிட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மின்னணு இயந்திரங்களில் 2-வது நாளாக மறுஆய்வுE20 petrol may harm BS-III vehicle rubber parts, says Union Minister Nitin Gadkari