சௌதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து திசைத் திருப்பியதாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹௌதி படைகள் களமிறங்கியுள்ளன. உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் ஒரே நுழைவு வாயிலான, பாப் அல்-மண்டப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதிகள் கட்டுப்படுத்தி வரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவ்வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஹௌதிகள் மற்றும் இராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதப்படைகளின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற 8 எண்ணெய்க் கப்பல்களை இடைமறித்து திசைத் திருப்பி அனுப்பியதாக, ஹௌதி கிளர்ச்சிப்படையின் செய்தித்தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார். இருப்பினும், கப்பல்கள் இடைமறிக்கப்பட்ட நேரம், நாள் உள்ளிட்ட விவகரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், சௌதி அரசின் தரப்பிலிருந்தும் இதுபற்றி எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.ஏற்கெனவே, கடந்த ஜூலை 20 முதல் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக சௌதி அரேபியாவின் கப்பல்கள் செல்வதற்கு ஹௌதிகள் தடை விதித்துள்ளனர். இதையடுத்து, சௌதி அரசுக்கு எதிரான தங்களின் நடவடிக்கைகள் தொடரும் என ஹௌதி படைகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரான் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது: டொனால்ட் டிரம்ப்Yemen's Houthi rebels have announced that they intercepted and diverted eight Saudi Arabian oil tankers.