காமன்வெல்த்: அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை!

Wait 5 sec.

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டைப் பிரிவில் அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்கள். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.இதுவரை இந்திய அணி 23 பதக்கங்கள் வென்றுள்ளன. அதில் 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்திலேயே தொடர்கிறது.இந்த நிலையில், நேற்று நடந்த குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்ற 10 இந்தியர்களும் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். இதனால், இந்தியாவுக்கு கூடுதலாக 10 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இந்த பத்து இந்தியர்களில் 4 ஆடவர்கள், 6 பெண்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள். ஆடவர்களில் அன்குஷ் பாங்கல் (80 கிலோ எடைப் பிரிவு), ஜடுமுனி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சச்சின் சிவாக் (60கிலோ எடைப் பிரிவு) நரேந்தர் பெர்வல் (90+ கிலோ எடைப் பிரிவு) ஆகிய நால்வரும் தேர்வாகியுள்ளார்கள். மகளிரில் ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ எடைப் பிரிவு), அருந்ததி சௌதரி (70 கிலோ எடைப் பிரிவு), சாக்‌ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு), லோவ்லினா (70 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா (60 கிலோ எடைப் பிரிவு) ஆகிய அறுவரும் தேர்வாகியுள்ளார்கள். HISTORIC. UNSTOPPABLE. DOMINANT. 10 FINALISTS Indian boxing just rewrote the record books at the Commonwealth Games 2026! 10 fierce warriors have stormed the ring to take over Glasgow and bring home the ultimate glory! pic.twitter.com/vaVaXMExCQ— Boxing Federation (@BFI_official) July 31, 2026India currently stands at 10th position in the medal standings at the Commonwealth Games 2026, with a total of 23 medals (5 Gold, 12 Silver, 6 Bronze) as of August 1, 2026.Join us in cheering on our incredible athletes as they aim higher and strive for excellence in the… pic.twitter.com/T87k5fPTyd— SAI Media (@Media_SAI) August 1, 2026டெக்காத்லான் பிரிவில் முதல் பதக்கம்..! வரலாறு படைத்த தேஜஸ்வின் ஷங்கர்! Commonwealth: All 10 Indians who played in the semi-finals have qualified for the final!