ஆடித் திருவிழா: குச்சனூரில் குவிந்த பக்தா்கள்!

Wait 5 sec.

தேனி மாவட்டம், குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் வாரம் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான  பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்யக் குவிந்தனர்.குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் 5 வார ஆடித் திருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கும் - நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நிறைவு பெற்றது.அதைத்தொடர்ந்து. தற்போது மூன்றாம் வாரத் திருவிழாவை முன்னிட்டு சனீஸ்வரரை  சுவாமி தரிசனம் செய்ய தேனி, மதுரை, சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.Thousands of devotees flocked to the Arulmigu Saneeswara Bhagavan Temple in Kuchanur, Theni district, to offer prayers on the third Saturday of the month, coinciding with the Aadi festival.கோயிலுக்குச் செல்லும்போது பட்டாடை அணிவது ஏன்? ஆன்மிகமும் அறிவியலும்!