கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு தழுவிய மாணவர் போராட்டமாக உருவானதால், மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 25 அன்று பதவி விலகினார்.இதையடுத்து, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் முன்வைத்த நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். இந்த நிலையில், இன்று (ஆக. 1) காலை 11.30 மணியளவில் தனது வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தில் தன்னைப் பார்க்க வந்த இளைஞர்களுடன் அபிஜீத் தீப்கே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அபிஜீத் தீப்கேவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது தந்தை பகவான் தீப்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சிஜேபி தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே, தில்லி போராட்டக் களத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அபிஜீத் தீப்கேவுக்கு டைஃபாய்டு பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜம்மு - காஷ்மீர் முதல்வரின் திருமணத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்! Abhijit Dipke, founder of the Cockroach janata Party, has fallen ill again and is receiving medical treatment at home.