முதல்வர் விஜய்யின் வெற்றி குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “வரலாற்றுப் புரட்சி” எனப் பெருமையாகக் கூறியுள்ளார். நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டறை ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராக மாறியிருக்கிறார் ச. ஜோசப் விஜய். எம்ஜிஆரை விடவும் அதிகமான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று அசத்தினார். முதல்வர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சிக்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். லைகா புரடக்ஷனில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது: தற்போது நடந்திருப்பது வரலாற்றுப் புரட்சி. இதில் எனக்கும் சரி, எனது தங்கைக்கும் சரி மற்றும் எனது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கூடுதலான பொறுப்பு வந்திருக்கிறது. அவருக்கு இருக்கும் மரபையும் காப்பாற்ற வேண்டும். அதில் கவனமுடன் நான் இருந்தாக வேண்டும். ஏனெனில் சூழ்நிலை அந்தமாதிரி இருக்கிறது. அவர் எனக்கு அளித்த அறிவுரை நன்றாக இருந்தது. ’தனியாக உனக்கென்று ஒரு ஆளுமையை உருவாக்கு’ எனக் கூறினார். எனக்கும் அதுதான் திட்டம். ’எதாவது உதவி என்றால் நிச்சயமாக உதவுவேன். ஆனால், எல்லாவற்றையும் நீயாகத்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் அனுபவம் கிடைக்கும்’ எனவும் குறியது எனக்குப் பிடித்திருந்தது என்றார். அப்பாதான் முதல் தேர்வு... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்! This is historical revolutions says Jason sanjay about his father Election win