மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் வறட்சியைத் தாங்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.மேக்கேதாட்டு விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது, "மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருப்பர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியவர் யார் என்பது பிரச்னையில்லை. கூட்டம் கூட்டப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பதுதான் முக்கியம்.மண், மக்களுக்காக உரிமைக்காக யார் நிற்கிறார்களோ, நிற்பான் தமிழன் என்ற நிலை வந்தால்தான், (கர்நாடகம்) பயப்படுவார்கள். நமக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என அவர்கள் நிற்கும்போது, கொடுத்தே ஆக வேண்டும் என நாம் ஏன் நிற்கக் கூடாது?வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிக்கக்கூட தண்ணீர் இருக்காது. இந்தாண்டிலேயே பருவமழை குறையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும் வெள்ளத்தைத் தாங்கிக் கொள்ளலாம்; வறட்சியை எப்படி தாங்க முடியும்?இப்போது குறுவை சாகுபடி முடிந்து விட்டது. இனி அது இல்லை. எல்லாவற்றையும் ஆய்வு செய்பவர், அதனை ஆய்வு செய்யவில்லை. ஒன்றிணைந்த வலிமையான போராட்டங்கள் மூலமாகத்தான் நம் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.நம்முடைய வளங்களாகிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி, நரிமண பெட்ரோல், மீத்தேன் எரிவாயு, அணு உலை மின்சாரம் என அனைத்தும் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களுடைய நீர்வளம் மட்டும் அவர்களுக்கே. இதனை இன்னும் எத்தனை காலத்துக்குச் சகித்துக் கொள்வது" என்று தெரிவித்தார்.அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்விMekedatu issue: How can the drought be withstood? NTK Leader Seeman asks