நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதல்வர் விஜய்! - தொழில் நிறுவனங்களில் ஆய்வா?

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் முதல்வர் ஜோசப் விஜய் நாளை(ஆகஸ்ட் 3) ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார். பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், 2026 - 27 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே, முதல்வர் ஜோசப் விஜய் அவ்வப்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிலைய தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலை பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிலையில், நாளை(ஆகஸ்ட் 3) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் முதல்வர் பார்வையிட உள்ளார். தமிழக அரசுடன் டைம்லர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வணிக வாகன உற்பத்தி செய்து வரும் நிலையில், ஒரகடத்தில் இயங்கி வரும் டைம்லர் வணிக வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் பார்வையிடுகிறார். இதேபோன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஸ்ரீபெரும்புதூர் மாம்பாக்கம் சிப்காட்டில் இயங்கி வரும் உலகத் தரத்திலான கண்ணாடி உற்பத்தி தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ள பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனமான செயிண்ட் கோபைன் நிறுவனத்தையும் முதல்வர் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Chief Minister Vijay is visiting Kanchipuram tomorrow!ஆக. 4,5,6 தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்