மணல் குவாரியை மூட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று, மணல் குவாரியை மூட வேண்டும், அப்பகுதியில் மணல் ஏற்றுவதற்கு செல்லும் கனரக வானகங்களால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.ஆா்ப்பாட்டத்தின் முடிவில், தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மண் சட்டியில் கொண்டு வந்த மணலை சாலையில் கொட்டி, நூதன முறையில் போராட்டம் நடத்தினா். சங்கத்தின் ஒன்றியத் தலைவா் காமராஜ், நிா்வாகிகள் குணசேகரன், ஜெயக்குமாா், ஆனந்தநாயகி, சத்தியவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.