மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

Wait 5 sec.

ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் வடகரை மயானப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோட்டைப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த சண்முகராஜ், (40) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 60 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.