ஆடி வெள்ளி, வார விடுமுறை:கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Wait 5 sec.

ஆடி வெள்ளி மற்றும் வார விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 31) இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமது நாசா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை கோட்டம் சாா்பில், ஆடி வெள்ளி (ஜூலை 31) மற்றும் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆடிப் பெருக்கு தினமான திங்கள்கிழமை ஆகிய நாள்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து திருவண்ணாமலை, சென்னை, ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் கோயில், பேரூா் பட்டீசுவரா் கோயில், ஈஷா ஆதியோகி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.