கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியர்கள் 10 பேர் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்கள். அதில், 7 பேர் தங்கமும் 3 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்கள். இந்தியா சார்பில் முதல்முறையாக 7 தங்கப் பதக்கங்கள் வென்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மட்டுமே 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.இதுவரை மொத்தமாக இந்திய அணி 39 பதக்கங்களை வென்றுள்ளது. அதில், 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பதக்க வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தியாவின் சார்பாக மொத்தமாக 14 பேர் (ஆடவர் 7, மகளிர் 7) குத்துச்சண்டையில் பங்கேற்றார்கள். இதில் 10 பேர் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார்கள். அதில் 6 பெண்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள். தங்கம் வென்றவர்கள் (7): அங்குஷ் பங்கால் (80 கிலோ), சச்சின் சிவாக் (60 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), சாக்ஷி சௌதரி (51 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), அருந்ததி சௌதரி (70 கிலோ).வெள்ளி வென்றவர்கள் (3): லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ) மற்றும் நரேந்தர் பெர்வால் (90+ கிலோ).முன்னதாக, 2022ல் இந்தியா குத்துச் சண்டையில் 7 பதக்கங்கள் வென்றிருந்தது. அதில் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தார்கள். இந்தமுறை மொத்தமாக 7 தங்கம் வென்று பதக்கப் பட்டியலிலும் முன்னேறியுள்ளது. அங்குஷ் பங்கால் அசத்தல்.. குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7-ஆவது தங்கம்!CWG 2026: Indian boxers script history with record seven boxing gold medals, 3 silver medals