ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்: 3 வழக்குகளுக்கு தீா்வு

Wait 5 sec.

ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொ) மு.கவிதா வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதித் துறை நடுவா் ஹரிஹரசுதன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட சிறை, கிளை சிறைகள், பரமக்குடி, முதுகுளத்தூா் ஆகிய இடங்களில் 3 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான மு.பாஸ்கா் செய்தாா்.