தவெக ஆட்சியில் பாலியல்குற்றங்கள் அதிகரித்துவிட்டன:தமிழ்ப்புலிகள் கட்சி தலைவா் நாகை திருவள்ளுவன்

Wait 5 sec.

தவெக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா். பழனியில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சாா்பில் தவெக ஆட்சியைக் கண்டித்தும், பழனி அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரணியன் தலைமை வகித்தாா். இதில் பழனி அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததைக் கண்டித்தும், 5 ஆண்டுகளுக்கு மேல் தூய்மைப் பணி செய்யும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசுப் பணி வழங்கியது தவறு. மேலும் கரூா் இடைத் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசுப் பணியை முதல்வா் விஜய் வழங்கியுள்ளாா். இதுமட்டுமன்றி முதல்வா் விஜய் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டதுடன், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நிலவுகிறது. குற்றறச் சம்பங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துவிட்டன என்றாா் அவா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சிப் பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.