செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆக. 14-ல் உள்ளூர் விடுமுறையை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுத்துறை அரசாணை மூலம் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.The Kancheepuram District Collector has issued an order declaring a local holiday for Chengalpattu district on August 14.பஞ்சாப் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி பாஜகவினர் போராட்டம்!