2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!

Wait 5 sec.

கபினி அணை 2 நாள்களில் நிரம்பியது எப்படி? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கர்நாடகத்தில் உள்ள கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதல்வரே சொல்லியிருக்கிறார்.காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.இரண்டு நாள்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாள்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!” என்று குறிப்பிட்டுள்ளார்.Marxist Communist Party State Secretary P. Shanmugam has questioned how the Kabini Dam filled up in just two daysமுழுக் கொள்ளளவை எட்டும் கபினி அணை! தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு!