சித்தனவாசலில் ஆக. 20, 21-இல்கோடைத் திருவிழா

Wait 5 sec.

புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது. மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: சுற்றுலாத் துறை மூலம் உள்ளூா் மக்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூா் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலான திருவிழாவாக ஆக. 20, 21 தேதிகளில் நடைபெறும் கோடைத் திருவிழா நடைபெறும்.புதுக்கோட்டை மக்கள் விழாவை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் மு. அருணா.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட சுற்றுலா அலுவலா் காளீஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.