ஒரு மனிதன், நடப்பது, நடக்கப்போவது, நடக்கவே வாய்ப்பில்லாதது என பலவற்றையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகை த்ரிஷா ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார்.கடந்த வாரம், நடிகை த்ரிஷா, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுத் திரும்பியிருந்தார்.அங்கு எடுத்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை த்ரிஷா, ஒற்றை வாக்கியம் ஒன்றை உதிர்த்துள்ளார். உண்மையில் பலருக்கும் இன்றைய நாளில் இது தேவையான அட்வைஸ்தான்.அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், "எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.உண்மையில் எவ்வளவு ஆழமான அறிவுரை. பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டு, அவர்கள் இப்படி பேசிவிட்டார்களே, சொல்லிவிட்டார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டு மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால், கவலைப்படுவதால் ஒன்றுமே மாறாது என்று இத்தனை ஆண்டுகாலமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தெரியும். இருந்தபோதும், அதனை நிறுத்துவதில்லை. View this post on Instagram A post shared by Trish (@trishakrishnan)கேட்டால், கவலைப்பட இத்தனை இருக்கிறது என்று ஒரு பெரிய பட்டியலைத்தான் போடுவார்கள். அதனைத் தவிர்த்து கவலைப்பட எத்தனையோ இருந்த போதும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேலையை மட்டும் செய்து கொண்டிருங்கள். வாழ்க்கை இனிமையாகும்.அதனைத்தான் நடிகை த்ரிஷாவும் சொல்லியிருக்கிறார்கள். யதார்த்தமான அறிவுரை என்பதால் எல்லோருக்குமே பயனிக்கும் என்பதால் இங்கே பகிர்ந்திருக்கிறோம். பின்பற்றலாமே.Actress Trisha has offered some advice on how to live a worry-free life. Here are the details...