துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!

Wait 5 sec.

மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.அவர் பேசியதாவது:”நமது கல்வி முறை கொடூரமானது, தனியார்மயமாக்கல் தலைவிரித்து ஆடுகிறது. இந்த அமைப்பின் ஆன்மா ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களின் வழியைப் பின்பற்றவும், அவர்கள் விரும்பும் கேள்விகள் கேட்கப்படுவதாலும் மாணவர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.தர்மேந்திர பிரதான் வெறும் முகம் மட்டுமே, உண்மையான எதிரி ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். மாணவர்களை குருட்டு பக்தர்களாக்க விரும்புகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உள்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுபவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து அமருவதற்கு துணிச்சல் இல்லை. அவர் இன்று நாடாளுமன்றம் வராதது ஏன்? துணிச்சல் இல்லையா? துணிச்சல் இருந்தால் அவரை வரச் சொல்லுங்கள்” என்றார் ராகுல்.ராகுலின் பேச்சைக் குறுக்கிட்ட அவைத் தலைவர் ஓம் பிர்லா, கல்வித் துறை விவாதத்தில் உள்துறை அமைச்சரை இழுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ராகுல், தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் யார் உத்தரவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் காரணம் என்றார்.ராகுலின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:“தில்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அமித் ஷாதான் உத்தரவிட்டார் என்று எதன் அடிப்படையில் ராகுல் காந்தி சொல்கிறார். தில்லியில் எந்த இடத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை.நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி தவறான தகவலைத் தெரிவிக்கிறார். இதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். ராகுல் காந்தியை மாஃபியா கும்பல் தலைவர் என்றால் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்வார்களா?” என்று தெரிவித்தார்.Who ordered the firing? Where is Amit Shah? Has he become afraid? Rahul asks in the Lok Sabha!மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!