நடிகர் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் அவரது 300-வது திரைப்படம் ”அர்ஜுனன் பேர் பத்து”. இசையமைப்பாளர் டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜூலை வெளியீடாகத் திரைக்கு வர வேண்டிய இப்படம் தள்ளிச் சென்றது. இப்படத்தில், நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ’பொறு... மனமே பொறு..’ பாடல் வெளியாகியுள்ளது. டி. இமான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை ஹிருதே தபஸ்வி, சௌந்தர்யா பால நந்தகுமார் ஆகியோர் பாடியுள்ளனர். The first song from actor Yogi Babu's film Arjunan Peru Pathu has been released.