நடிகை விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் அகத்தியனின் மகள்களில் ஒருவர் விஜயலட்சுமி. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையிலிருந்தவருக்கு சென்னை 28 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சுல்தான் தி வாரியர் என்கிற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்திற்காக சில நாள்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவும் செய்தார். ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக விஜயலட்சுமி நடித்தார். இறுதியாக, மிடில் கிளாஸ் திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார். அதன்பின், விஜயலட்சுமி தன் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். View this post on Instagram A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg) அதேநேரம், தினமும் இன்ஸ்டாகிராமில் அன்றாட செயல்பாடுகள் குறித்த விடியோவை வெளியிட்டு வருகிறார். உடல் நலத்தில் அக்கறை கொண்டவரான விஜயலட்சுமி, ஆரோக்கியமான உணவுகளைச் சமைத்து அதன் நன்மைகள் குறித்தும் பேசுவார். இதற்கிடையே, ஆடை அணிந்து ஒப்பனைகள் செய்யும் (get ready with me) விடியோக்களையும் பதிவிடுவார். தற்போது, சேலை அணிந்து தயாராகும் விடியோவை, “அவள் வருவாளா?” பாடலுடன் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ”உங்களுக்கு 43 வயதென்றால் யாரும் நம்ப மாட்டார்கள் விஜி... மிக அழகாக இருக்கிறீர்கள்” என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த விடியோ சுற்ற ஆரம்பித்திருக்கிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பார்த்த சூர்யா! என்ன சொன்னார்? A Reel posted by actress Vijayalakshmi on Instagram is going viral on social media.