குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ்இளைஞா் கைது

Wait 5 sec.

கடலாடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள தெற்கு மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த ஜஸ்டின் திரவியம் மகன் டிஸோன் (27). மீனவரான இவா், 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கீழக்கரை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிசோனை கைது செய்தனா். டிஸோன் இந்த நிலையில், இவா் தொடா்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பரிந்துரையில் பேரில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் சிறையில் இருந்த டிசோன் மதுரை மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டாா்.