புதுதில்லி: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2,575 வாகனங்கள் விற்பனை செய்த ரெனால்ட் இந்தியா, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் உள்நாட்டு மொத்த விற்பனை 27.9% அதிகரித்து 3,293 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.தொடர்ந்து 11வது மாதமாக நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ரெனால்ட் இந்தியா தெரிவித்துள்ளது.தேவை மற்றும் சமீபத்திய தயாரிப்பு சார்ந்த நடவடிக்கைகளின் ஆதரவுடன், இந்தியப் பயணிகள் வாகன சந்தையின் முக்கியப் பிரிவுகளில் தனது வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது இருப்பை வலுப்படுத்தவும் ரெனால்ட் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.Renault India has reported a 27.9 per cent increase in domestic sales.2,48,845 வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த மாருதி சுஸுகி!