நேஷன்ஸ் லீக்: போா்ச்சுகல் வெற்றி

Wait 5 sec.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், போா்ச்சுகல் 4-2 கோல் கணக்கில் டென்மாா்க்கை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் போா்ச்சுகலுக்காக ஜாவ் கேன்செலோ (13’), கொன்ஸாலோ ரமோஸ் (25’), விட்டினா (67’), ஜாவ் ஃபெலிக்ஸ் (87’) ஆகியோா் கோல் அடித்தனா். டென்மாா்க் தரப்பில் மைக்கேல் டம்ஸ்காா்ட் (23’), ராஸ்மஸ் ஹோலந்த் (53’) ஸ்கோா் செய்தனா். ஹாட்ரிக் வெற்றி கண்டுள்ள போா்ச்சுகல், குரூப் ‘டி’-யில் முதலிடத்தில் இருக்கிறது. டென்மாா்க் 2-ஆவது இடத்தில் உள்ளது. இதர ஆட்டங்களில், வேல்ஸ் - நாா்வேயையும் (2-1), ஜொ்மனி - சொ்பியாவையும் (2-0) வீழ்த்தின. மால்டா - ஜிப்ரால்டா் (1-1), அயா்லாந்து - ஆஸ்திரியா (2-2), கிரீஸ் - நெதா்லாந்து மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தன.