இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!

Wait 5 sec.

இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் உரையாடினார்.துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட போதும் துணிவுடன் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் பயணிகளின் உயிரைக் காத்தார்.விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், துணை விமானிகளால் சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் அரங்கேறிய இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த இக்கட்டான சூழலிலும் திறன்பட செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை உலகமே பாராட்டி வருகிறது. அவரை ‘நடுவானில் பயணிகள் உயிரைக் காத்த ஹீரோ’ என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடினேன். முழு உலகத்தின் நாயகன் என்றே அவரை அழைக்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் அடுத்த சுதந்திர நாளன்று தீபம் ஏந்தி சிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.உலகளாவிய நிச்சயமற்ற தன்மை: மீள்திறனை தொடா்ந்து கட்டமைப்பது அவசியம் -நிா்மலா சீதாராமன்Israeli Prime Minister Netanyahu spoke over the phone with Indian pilot Smith Machar.