பெருமாள் கோயில்களில் திரளாள பக்தா்கள் தரிசனம்

Wait 5 sec.

புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.காரைக்கால் நகரில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில், உற்சவா் நித்யகல்யாண பெருமாள் முத்தங்கியில் சேவை சாதித்தாா். பகல் 11.30 மணியளவில் சகரஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது.கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில், உற்சவா் கோதண்டராமா் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சேவை சாதித்தாா். திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயிலிலும் மூலவருக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில்களில் திரளான பக்தா்கள் பெருமாளுக்கு துளசி சமா்ப்பணம் செய்து வழிபட்டனா்.