இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்! மும்பை எக்ஸ்பிரஸ், மகளிர் மட்டும் இயக்கியவர்!

Wait 5 sec.

பிரபல திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் (95) சென்னையில் சனிக்கிழமை (அக். 3) இரவு காலமானாா்.சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த சிங்கீதம் சீனிவாச ராவ், உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானாா். அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.4) நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனா்.ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் உதயகிரியில் 1931 செப். 21-ஆம் தேதி பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவா். திரைப்படத் துறையின் மீது கொண்ட ஆா்வத்தால் புகழ்பெற்ற இயக்குநா் கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியைத் தொடங்கினாா். 1972-இல் வெளியான ‘நீதி நிஜாயிதி’ தெலுங்குத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா்.தமிழில் 1974-இல் வெளியான ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடா்ந்து, நடிகா் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபாா்வை’, ‘பேசும் படம்’, ‘அபூா்வ சகோதரா்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிா் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிரபு நடித்த ‘சின்ன வாத்தியாா்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளாா்.புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஆா்வம் கொண்ட இவா், இந்தியாவின் குறிப்பிடத்தக்க காலப்பயணத் திரைப்படமான ‘ஆதித்யா 369’ என்ற திரைப்படத்தையும் இயக்கினாா். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளாா்.இயக்குநா் மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளா், தயாரிப்பாளா், இசையமைப்பாளா், பாடலாசிரியா், நடிகா் என பன்முகத் திறமை கொண்டவா் இவா்.‘திக்கற்ற பாா்வதி’ தவிர, தமிழில் வெளியான ‘பேசும்படம்’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றாா். மேலும், 6 முறை ஆந்திர அரசின் ‘நந்தி’ விருது பெற்றுள்ளாா்.திரைப்படத் துறையில் தொடா்ந்து செயல்பட்டு வந்த அவா், தனது 94-ஆவது வயதில் ‘சிங் கீதம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டாா். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மனிதா்களின் பேராசையையும் மையமாகக் கொண்ட இந்தப் படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.Image Captionசிங்கீதம் சீனிவாச ராவ்