நடிகை ஷ்ருதி ஹாசன் மலையாள சினிமா குறித்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷ்ருதி ஹாசன், “நான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. இன்னும் மலையாளத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. எப்போதும் அந்த ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது. சரியான கதைக்காகக் காத்திருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இதனால், விரைவிலேயே ஷ்ருதி மலையாள சினிமாவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்: சிவகார்த்திகேயன்Actress Shruti Haasan has spoken about Malayalam cinema.