மகளிர் கோல்ஃப் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..! வரலாறு படைத்த பிரணவி!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கோல்ஃப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல்முறையாக தங்கம் வென்று கொடுத்து பிரணவி சரத் (23 வயது) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.மகளிருக்கான கோல்ஃப் விளையாட்டில் பிரணவி சரத் யுஆர்எஸ் இறுதிப் போட்டியில் 265 (66, 63, 66, 70) புள்ளிகள் பெற்று குறைவான முயற்சிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இந்தப் பிரிவில் சீன வீராங்கனை 266 புள்ளிகளுடன் வெள்ளியும் சிங்கப்பூர் வீராங்கனை 266 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றார்கள்.பிரணவி சரத் வென்ற தங்கப் பதக்கம்தான் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2002ல் ஷிவ் கபூர் தனிநபர் ஆடவர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். மகளிர் பிரிவில் முதல்முறையாக இந்தப் பதக்கத்தை வென்று வரலாற்றில் பிரணவி இடம்பிடித்துள்ளார்.இத்துடன் இந்தியாவுக்கு 18 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் உடன் 78 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.INDIA'S FIRST-EVER ASIAN GAMES WOMEN'S GOLF CHAMPION Pranavi Sharath Urs makes history as India’s first #AsianGames gold medallist in women's individual golf at #AichiNagoya2026. pic.twitter.com/CL4pyhr3E4— Olympic Khel ™ (@OlympicKhel) October 3, 2026ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..! 17 வயது வீராங்கனை வரலாற்றுச் சாதனை!Pranavi Sharath Urs makes history as India’s first Asian Games gold medallist in women's individual golf