இயக்குநர் சிதம்பரம் நடிகர் ரிஷப் ஷெட்டியின் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்தாண்டு ஆக. 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.பான் இந்திய வெளியீடான இது ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. இதற்காக, இந்திய அளவில் ரிஷப்புக்கு கவனம் கிடைத்தது. தற்போது, ஜெய் ஹனுமான், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகர்களில் ஒருவருராகவும் வளர்ந்துள்ளார். இந்த நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ், பாலன் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஒரு திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை, சிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளாராம். வரவேற்பைப் பெறும் விஜய் சேதுபதியின் பத்தா! வசூல் எவ்வளவு?Reports indicate that director Chidambaram is set to direct actor Rishab Shetty's new film.