மரகத நாணயம் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.