மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.5-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறுவேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: Estt/1/2036/2026-27பணி: Industrial Safetyகாலியிடங்கள்: 3தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பாதுகாப்புப் பொறியியல் பிரிவில் முதுகலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: Geologyகாலியிடங்கள்: 6தகுதி: புவியியல், பயன்பாட்டுப் புவியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Electricalகாலியிடங்கள்: 8தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Mechanicalகாலியிடங்கள்: 6தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மைனிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Civilகாலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: M & HSகாலியிடங்கள்: 4தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Environment Managementகாலியிடங்கள்: 2தகுதி: பொறியியல் துறையில் சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Mineral Processingகாலியிடங்கள்: 3தகுதி: பொறியியல் துறையில் கனிம மற்றும் உலோகவியல் பொறியியல், கனிமச் செயலாக்கம் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.பணி: Financeகாலியிடங்கள்: 3தகுதி: சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம், பணியாளர் மேலாண்மை பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.பணி: Human Resourcesகாலியிடம்: 1தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.பணி: Surveyகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.94,200தகுதி: பொறியியல் துறையில் மைனிங்க், சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கான 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.10.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Hindustan Copper Limited (HCL), a multi-unit, Schedule-A Miniratna Category-I Central Public Sector Enterprise, invites applications from experienced professionals for engagementமத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?