மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவு - புகைப்படங்கள்

Wait 5 sec.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிறைவுப் பெற்ற மகாகும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தி விழா.மண்டலப் பூஜை நடைபெற்று வந்த நாட்களில் தினமும் சுமார் 40,000 முதல் 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.வரும் 11 ஆம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு இன்று மண்டல பூஜை நிறைவு பெற்றது.நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை விழாவின் நிறைவை முன்னிட்டும், தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு கோபுர நுழைவுவாயில்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவுவாயில்கள் வழியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றனர்.