ஜென் ஸீ தலைமுறையின் முகமாக அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா இருப்பதை ஒப்புக்கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (அக். 4) தெரிவித்தார். சமூக வலைதளப் பக்கத்தில் அபிஜீத் தீப்கேவை விட சிறந்த செயல்பாட்டாளர் நேஹா போரா எனப் பதிவிட்டதற்கு, அதை ஒப்புக்கொள்வதாகக் அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி அகில இந்திய மாணவர் சங்கத்தினர் தில்லி ஜந்தர் மந்தரில் உள்ள அசோகா சாலையில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுப்புகளை அமைத்தும் தடியடி நடத்தியும் கலைத்தனர். இப்போராட்டத்தில் மாணவர்களை நேஹா போரா வழிநடத்திச் சென்றிருந்தார். அவரை காவல் துறையினர் தடுத்து தடுப்புக் காவலில் எடுத்துச் சென்றனர். இதேபோன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இளைஞர்களை திரட்டி மும்பை சிவாஜி பூங்காவில் அபிஜீத் தீப்கே போராட்டத்தில் ஈடுபட்டார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட இளைஞர்கள் மாணவர்கள் பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் முடிவில் அனுமதியின்றி போராட்டத்திற்கு கூட்டத்தைக் கூட்டியதாக அபிஜீத் தீப்கே, செய்தித் தொடர்பாளர்கள் அசுதோஷ் ரானா, செளரவ் தாஸ், ரத்னா சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சமூகவலைதளப் பக்கத்தில் பயனர் ஒருவர், நேஹா போராவை கைது செய்து அழைத்துச் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, அபிஜீத் தீப்கேவை விட சிறந்த செயல்பாட்டாளர் நேஹா போரா என்பதை உணர்வதே முதிர்ச்சி. முழுமையான ஆளுமை கொண்ட ஜென் ஸீ முகமாக நேஹா இருக்கிறார் எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இப்பதிவை மறுபதிவு செய்து, இதனை ஒப்புக்கொள்கிறேன் என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார். I agree. https://t.co/6q9GZLpMSv— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 3, 2026அதிகரிக்கும் நெருக்கடி? ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த உத்தரவு!AISA Neha Bora is complete Gen Z icon with an absolutely ridiculous aura Abhijeet Dipke agreed