விமானி ஸ்மித் மச்சாரை ராகுல் பாராட்டாதது ஏன்? வாக்கு வங்கிதான் காரணமா?

Wait 5 sec.

வாக்கு வங்கிக்காக விமானி ஸ்மித் மச்சாரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாராட்டவில்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.நடுவானில் தாக்குதலுக்குள்ளானபோதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக தலைவர்கள் பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது, "நடுவானில் பயணித்த விமானத்தில் பலத்த காயமடைந்தபோதிலும் 174 பேருடன் சென்ற விமானத்தை வீழ்த்துவதற்காக நடந்ததாகக் கூறப்படும் முயற்சியை விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தார்.இந்தியா பெருமைப்பட வேண்டிய இந்தத் தருணம், அவமானப்பட வேண்டியதாகவும் உள்ளது. விமானி ஸ்மித் மச்சாருக்காக காங்கிரஸ் குடும்பத்தாரிடம் இருந்து ஒரு வார்த்தையோ சமூக ஊடகங்களில் அறிக்கைகூட வரவில்லை.இஸ்ரேல் போரில் காஸாவுக்காக வருத்தம் தெரிவித்த சோனியா காந்தியின் குடும்பத்தார். தற்போது வாக்கு வங்கிக்காக ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டிப் பேச முடியாமல் தவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு! பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?BJP attacks Congress over silence on pilot Smit Machchhar