நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்லது தொல்லைதரும் உயிரினங்களோ அல்ல; இந்நாட்டின் குடிமக்கள் என இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தெரிவித்துள்ளார். வெறுமனே வாகனங்களில் திணித்து ஏற்றிச் செல்லக்கூடிய நபர்கள் அல்ல என்றும், உரிமைகளுக்காக போராடக் கூடியவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (அக். 4) போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் நேஹா போரா, மாணவர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு அசோகா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். மேலும், தடியடி நடத்தியும் கலைத்தனர். அப்போது காவலர்களின் தடுப்புகள் மீது ஏறி போராடிய நேஹா போரா உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் நேஹா போராவை அழைத்துச் சென்ற வாகனம் காவல் துறையின் வாகனம் அல்ல என்றும், கைது செய்து அழைத்துச் சென்றவர்கள் பெயர்ப் பலகை இல்லாத சீருடை அணிந்திருந்ததாகவும் அகில இந்திய மாணவர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஒரு பெண் காவலர் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இந்திய மாணவர் சங்கம் தரப்பில் இருந்து வழக்குரைஞர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையே போராட்டக் களத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட நேஹா போராவை காவல் துறையினர் மாலையில் விடுவித்தனர். காவல் துறை கைது செய்து அழைத்துச் சென்ற வாகனத்தில் இருந்தவாறே பேசிய நேஹா போரா, ''நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்லது தொல்லைதரும் உயிரினங்களோ அல்ல. நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள்; வாகனங்களில் சாதாரணமாகத் திணித்துக்கொண்டு செல்லப்படக்கூடியவர்கள் அல்ல. உரிமைக்காக போராடுபவர்களை வீழ்த்த முடியாது'' எனக் குறிப்பிட்டார். ஜென் ஸீக்களின் முகம் நேஹா போரா! ஒப்புக்கொண்ட அபிஜீத் தீப்கே!Neha Bora speaks about today’s protest and her detention after being released