டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கிவிட்டேன்: தென்னாப்பிரிக்க வீரர்

Wait 5 sec.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கிவிட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை முன்கூட்டியே தொடங்கிவிட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே தெரிவித்துள்ளார்.கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து ஆன்ரிச் நார்ட்ஜே பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான பயிற்சியை தொடங்கிவிட்டேன். என்னுடைய திறமையை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வமாக உள்ளேன். கிரிக்கெட் பயணத்தை தொடங்கியதிலிருந்தே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதுதான் எனக்கான உத்வேகமாக இருந்தது என்றார்.தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.The South African fast bowler has stated that he has started training early for the Test series against Australia.ரோஹித் சர்மா அவரது வயதைவிட அதிக சதங்கள் விளாசுவதை விரும்பும் முன்னாள் இந்திய கேப்டன்!