இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த சிங்கீதம் சீனிவாச ராவ், உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானாா். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழில் 1974-இல் வெளியான ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடா்ந்து, நடிகா் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபாா்வை’, ‘பேசும் படம்’, ‘அபூா்வ சகோதரா்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிா் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிரபு நடித்த ‘சின்ன வாத்தியாா்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கினார். நடிகர் கமல் ஹாசனுடன் நல்ல வழிகாட்டி உறவுடன் இருந்தவர் என்பதால் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற நிகழ்ச்சியையும் நடத்தில் பல இயக்குநர்கள், நடிகர்களை வரவழைத்து அனுபவ நிகழ்ச்சியாகவும் மாற்றினார். சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன்Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham… pic.twitter.com/l3TmmBWv4Y— Kamal Haasan (@ikamalhaasan) October 4, 2026 இந்த நிலையில், சிங்கீதம் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல் ஹாசன், ‘சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்ற வேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன்.’ எனப் பதிவிட்டுள்ளார். இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்! மும்பை எக்ஸ்பிரஸ், மகளிர் மட்டும் இயக்கியவர்!Actor Kamal Haasan has expressed his condolences over the passing of director Singeetham Srinivasa Rao.