சிவகங்கை: சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாதிய விரோதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்ட இளைஞரை சிவகங்கை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், ‘சிவகங்கை மாவட்டத்தை நோக்கி தன்மானப்படை’ வருவதாகக் கூறி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சாதிய பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகள் பதிவிடப்பட்டிருந்தன. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட சமூக வலைதள கண்காணிப்புப் பிரிவினா் வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்தனா். இதுதொடா்பாக கடந்த ஆக. 31-ஆம் தேதி சிவகங்கை இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.தொடா்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்து அதற்குரிய முகவரியை போலீஸாா் கண்டறிந்தனா்.அப்போது இதில் ஈடுபட்டவா் காரைக்குடி தாலுகா, ஊஞ்சனை அருகே மீனாவயல் பகுதியைச் சோ்ந்த சிவதரிஷ் (19) என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த சனிக்கிழமை காரைக்குடியில் சிவதரிஷை போலீஸாா் கைது செய்தனா். பிறகு அவா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிவகங்கை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.இதனிடையே, சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவா்கள், சாதிய மோதல்களைத் தூண்டுபவா்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்தாா்.Youth arrested for social media post inciting caste-based conflictராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு அக். 16 வரை நீதிமன்றக் காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு